ஹெரோயின் உருண்டைகளை விழுங்கி இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின்  கராச்சியிலிருந்து, இலங்கை விமான சேவைக்கு சொந்தமான  யுஎல் 184 விமானத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் ஹெரோயின் உருண்டைகளை விழுங்கி இலங்கைக்கு கடத்திவருவது தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிக்கு இன்றைய தினம் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி இந்த பெண்மணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்த பெண்ணை நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் பொலிஸார்  அனுமதித்ததோடு வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சிகிச்சை மூலமாக குறித்த பெண் விழுங்கி வந்த ஹெரோயின் உருண்டைகள் அகற்றப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைக்க பெற்றுள்ளது 

அந்தவகையில் இதுவரை 46 ஹெரோயின் உருண்டைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு மேலும் பெண்ணின் வயிற்று பகுதியில் ஹெரோயின் உருண்டைகள் இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.