(நா.தினுஷா) 

கல்விதுறையில் காணப்படும் தொழில் பற்றாகுறைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் இறுதிக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வருடத்தின் இறுதிக்குள் அதிபர்கள் 1948 பேரையும், ஆசிரியர்கள் 1000 பேர் மற்றும் கல்வி நிர்வாக சேவைப்பிரிவக்கு 480 பேர் வரையானவர்கள் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், கல்வி துறையில் காணப்படும் சம்பள பிரச்சினைகளுக்கும் தீர்வைபெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் அறிவாற்றலின் வேகம் வளர்ந்த வண்ணமே உள்ளது. தற்போதைய அளவில் அறிவாற்றல் விருத்தி 13 மாதங்களில் இரண்டு மடங்காக அதிகரிப்பதாக சர்வதேச ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதற்கு ஏற்றாற்போன்று ஆசிரியர்களும் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமது அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கற்ப்பித்தல் துறையில் திறமையை வெளிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் சிறந்த அதிபர்களுக்கு 'குரு பிரதிபா பிரபா" விருது வழங்கும் வைபவம் இன்று கல்வி அமைச்சர் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.