சீரற்ற காலநிலை காரணமாக  நேற்று சீனாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சீனாவிலிருந்து வந்த விமானம்  நேற்று இரவு 09.30 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது அசாதாரண காலநிலை காரணமாக நேற்று இரவு 10.30 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக மத்தள விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறாத நிலையில் குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் விமானத்திற்கு தேவையான எரிபொருள் ஏற்றப்பட்டு  இன்று அதிகாலை  1.10 மணியளவில்  மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.