சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட ’படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருடன் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ்,பொலிவூட் நடிர் நவாசூதீன் சித்திக், விஜய் சேதுபதி, பொபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் ஏற்றிருக்கும் மற்றொரு வேடத்தின் புகைப்படத்தை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இதில் ரஜினி தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவராகவும், மீசையை தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் வைத்துக் கொண்டதைப் போன்றும் இருப்பதால் ரஜினியின் இந்த தோற்றத்திற்கு இலட்சக்கணக்கான லைக்குகள் பெற்று டிரெண்டிங்கில் இருக்கின்றன. ரஜினி ரசிகர்கள், தங்கள் தலைவரின் இந்த தோற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, சந்தோஷமடைந்திருக்கிறார்கள்.
ஆனால் திரையுலகினர் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்த படத்திற்கு தற்போது ஏன் இந்த கெட்டப்பில் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறித்து வியப்பு தெரிவிப்பதுடன் ,இதன் பின்னணியிலும் அரசியல் இருக்குமோ... என தங்களுக்குள் பேசிக் கொள்வது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM