சொந்த  மகளையே இருமுறை  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு கடுமையான வேலையுடன் கூடிய 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்துள்ள நிலையில் ,  மனைவி வெளிநாட்டுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தனது மூத்த மகளையே இவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இன்று அனுராதபுரம் சிறப்பு உயர் நீதிமன்றத்தின்  நீதவான் பேமா சுவர்ணாபதி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  இருமுறை துஷ்பிரயோகம் மேற்கொண்டதற்காக, ஒரு முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கு 20 வருடங்கள் படி , இரண்டு முறைக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.