(எம்.ஆர்.எம்.வஸீம்)

பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்கு பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது. மைத்திரி, மஹிந்த புரிந்துணர்வினூடாகவே சிங்கள மக்களின் ஆதரவை பெறமுடியும். அத்துடன் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஏமாற்றடையாமல் வடக்கு பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்கொள்ள வேண்டுமானால் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு தேவையாகும். சிங்கள மக்களின் ஆதரவை  மஹிந்த, மைத்திரி கருத்தொருமைப்பாட்டுடனே பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறில்லாமல் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என்றார்.