ஹிக்கடுவ – திரனகமவில் ரயிலுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடனயே ஹிக்கடுவ பகுதியில் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தால் கண்டி மாத்தறை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.