கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

'புத்தளம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வேலைத்திட்டத்திற்கு எதிரான மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்' என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'இழந்தது போதும் இருப்பதை காப்போம். திரண்டு வாரீர்' என்ற வாசகமும் எழுதப்பட்ட பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தலையில் கறுப்பு பட்டி அணிந்தவாறு கழிவகற்றல் திட்டத்திற்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.