தொழில்நுட்பத்தினூடாக சமூகங்களை வலுப்படுத்தும் முயற்சி

Published By: R. Kalaichelvan

04 Oct, 2018 | 12:11 PM
image

The Road to Rights Youth-led Organization மற்றும் Mithuru Mithuro இயக்கம் ஆகியன ஒன்றிணைந்து Gamata Tech என்ற சுயாதீன,தேசிய செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதுடன்,Bannercuts.com இதற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.   

2018 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகள் செயற்திட்ட விருதின் வெற்றியாளரும்,இளைய சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பவரும்,சமூக தொழில் முயற்சியாளரும்,The Road to Rights Youth-Led Organization இன் ஸ்தாபகருமான அஷன் பெரேரா அவர்களின் இணைத் தலைமையில் இலங்கையின் அனைத்து பாகங்களையும் உள்ளடக்கியவாறு,நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற இளைஞர் சார்ந்த தொழில்நுட்ப தொழில்முயற்சியாளர்களின் முயற்சியான ஒரு விரைவுபடுத்தல் செயற்திட்டமே Gamata Technology ஆகும். The Road to Rights Youth-led Organization மற்றும் Mithuru Mithuro இயக்கம் ஆகியன ஒன்றிணைந்து Gamata Tech என்ற சுயாதீன,தேசிய செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதுடன்,Bannercuts.com இதற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. 

போதிய வாய்ப்புக்களின்றி கிராமப்புறங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளித்து,ஒத்துழைப்பினை ஊக்குவிக்கும் ஒரு தொழில்முயற்சியாண்மை சூழலைத் தோற்றுவித்து தொழில்வாய்ப்பினை வளர்ச்சி பெறச் செய்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வளங்களுடன் இணைப்புக்களை ஏற்படுத்துவதற்கான ஒரு தளமேடையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.இலங்கையில் 19 மாவட்டங்களை உள்ளடக்கிய வண்ணம் இளம் தொழில்முயற்சியாளர்கள்,முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் உள்ளூர் பிரதேசவாசிகள் முன்னிலையில் 2018 ஒக்டோபர் 14 ஆம் திகதியன்று நெலும் பொக்குண மகிந்த ராஜபக்ஷ கலையரங்கில் Gamata Technology முயற்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

தொழிற்துறையில் ஆழமான அறிவைக் கொண்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு டிஜிட்டல் இலங்கை தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதுடன், நாட்டின் அனைத்து பாகங்களையும் சார்ந்த 1,000 இற்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Gamata Technology தளமேடையின் இணைத் தலைவரான அஷான் பெரேரா அவர்கள் இந்நிகழ்வு தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில்,“மிக வேகமாக வளர்ச்சி மாற்றம் கண்டு வருகின்ற தொழில்நுட்ப களத்தில் தொழில்நுட்பத்தால் கட்டியெழுப்பப்படுகின்ற பெறுமதியை சமூகங்கள் உணர்ந்து கொள்ள உதவுகின்ற வகையில் ஒரு சௌகரியமான தளமேடையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே Gamata Technology முயற்சியின் முக்கிய நோக்கமாகும். 

இலங்கையில் டிஜிட்டல்மயமாக்கத்தை உயர் தராதரம் கொண்டதாக மாற்றியமைக்கும் எண்ணக்கருவினை விதைப்பதில் நாம் உழைப்பதுடன், டிஜிட்டல்மயமாக்க நடைமுறை தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகளவான ஈடுபாட்டுடன், அவர்களை உள்வாங்கும் முயற்சிகளை அதிகரிப்பது இதன் இலக்காக உள்ளது. 

அரச மற்றும் ஏனைய துறைகளை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்திற்கு இது பேருதவியாக அமையும்,”என்று குறிப்பிட்டார்.

வர்த்தக மாதிரிகள்,நிறுவன முறைகள்,சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள்,பொருளாதார கட்டமைப்புக்கள் மற்றும் மிக முக்கியமாக கலாச்சார முட்டுக்கட்டைகள் போன்று நாட்டின் பல்வேறுபட்ட துறைகளில் செல்வாக்குச் செலுத்தி, மாற்றத்திற்கு வித்திடும் புதிய வாய்ப்புக்களை டிஜிட்டல்மயமாக்கம் தோற்றுவிக்கின்றது.இணைத் தலைவரான அஷான் பெரேரா அவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “எனினும் துரதிஷ்டவசமாக இவை அனேகமாக நகர்ப்புற மற்றும் கைத்தொழில் பிரதேசங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படுகின்றன. 

தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் முகங்கொடுக்கின்ற பல்வேறு சிரமங்கள் காரணமாக தொழில்நுட்பத்தை அடையப்பெறுவதில் கிராமப்புற மக்கள் பெரும்பாலும் பின்தங்கியே உள்ளனர். 

இது ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்தியையும் பாதிக்கின்றது. 

பொதுமக்களுக்கு சௌகரியத்தை தோற்றுவிக்காத பட்சத்தில் அரச துறையை டிஜிட்டல்மயமாக்குவதால் பெரும் பயன் கிட்டப்போவதில்லை. எனினும். அண்மைக்காலங்களில் தனியார் துறை இதன் மீது கவனம் செலுத்தியுள்ளதுடன்,இதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. ஒருவர் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்பத்தை உபயோகிப்பதை உள்ளடக்குவதில் பல்வேறுபட்ட சேவைகளை அவை அறிமுகப்படுத்தியுள்ளன.

இம்முறைமையானது அதன் பயனாளர்களைப் பொறுத்தவரையில் அதிக வினைதிறனும்,உதவியும் மிக்கது என்பதை நிருபித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் மிகவும் உகந்த மற்றும் மாற்றத்தை கைக்கொள்ளும் தன்மை வாய்ந்த ஒரு சந்தையாக இலங்கை காணப்படுகின்றமை மிகவும் உற்சாகமூட்டும் ஒரு செய்தியாகும். 

தொழில்நுட்ப பரிணாமத்தின் மூலமாக இலங்கை தொழில்நுட்பவியல் முறைமையானது தற்போது முன்னேற்றம் கண்டு வருகின்ற தொழில்நுட்ப உலகிற்கு முகங்கொடுப்பதற்கு தன்னை தயாராக்கி வருகின்றது. இதன்

விளைவாகரூபவ் நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்கள் வரை ஏராளமான இளைஞர்ரூபவ்யுவதிகள் நவீன தொழில்நுட்பத்தை உச்ச அளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிகழ்வில் தமது அறிவு மற்றும் தொழில்நுட்ப திறமை ஆகியவற்றை காண்பிக்கவுள்ள திறமை வாய்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு ஆரம்ப களமாக Gamata Technology அமையவுள்ளது.

இத்தளமேடையானது கிராமப்புறங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகளின் அனுபவ வெளிப்பாடுகளை வழங்கி,அதன் மூலமாக மக்கள் நேரம் மற்றும் இடம் ஆகிய முட்டுக்கட்டைகளைத் தாண்டி,திறன்மிக்க வழியில் தொடர்பாடலை முன்னெடுத்து,தகவல் மற்றும் அறிவு மூலமாக தங்களை வலுவூட்டி,வருமானத்தை ஈட்டும் மற்றும் கற்றலுக்கான வாய்ப்புக்களை வழங்கி,வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரித்து,மக்கள் தமது அக்கறைகளை வெளிப்படுத்தி,தீர்மானத்தை வகுக்கும் நடைமுறையில் தம்மை ஈடுபாட்டுடன் பங்குபெறச் செய்வதை ஊக்குவிக்கின்றது. 

சந்தை, உற்பத்தித்திறன்,போட்டித்திறன் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை தோற்றுவித்தல் ஆகிய செயல்திறன்களை மேம்படுத்தி,பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதில் இதன் பங்கு மிகவும் முக்கியமாகும்.

Bannercuts.com மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தளமேடைகளின் மூலமாக 15 இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்களின் வாழ்வில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள ஒரு அடிமட்ட முன்னெடுப்பான I.C.A.N Advertising ஆகியன இந்நிகழ்விற்கு தமது ஆதரவை வழங்குகின்றன. 

தொழில்நுட்பம் மற்றும் விளம்பர தொழிற்துறைகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ICAN செயற்பட்டு வந்துள்ளதுடன், இத்துறையில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட வல்லுனர்கள் அணியையும் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57