தோலுரித்து கொலைசெய்யப்பட்ட கழுகின் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கழுகின்  மேலும் சில புகைப்படங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கழுகின் புகைப்படஙகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய சந்தேக நபர் நேற்றைய தினம் ஹபராதுவ பொலிஸில் சரணடைந்தார்.

இந்நிலையிலேயே சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனை செய்த பொலிஸார்  குறித்த கழுகு உயிருடன் இருக்கும் புகைப்படத்தை கைப்பற்றியுள்ளனர்.

கழுகின் கொலையுடன் தொடர்புடைய சில நபர்கள்  அதன் தோலை உரித்து, மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்ததோடு மட்டுமல்லாது அந்த சம்பவத்தினை புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியும் இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு : http://www.virakesari.lk/article/4050