(இரோஷா வேலு) 

ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலிலிருந்து தப்பிச் சென்ற ‘குடு சுத்தி’ என்றழைக்கப்படும் பெண் நேற்று தனது சட்டத்தரணியுடன் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுள்ளார். இவ்வாறு சரணைந்தவரை கைதுசெய்த பொலிஸார் அவரை இன்று காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

‘குடு சுத்தி’ என அழைக்கப்படும் 40 வயதுடைய முனுகொட வீதி கலுவே ஹிக்கடுவையைச் சேர்ந்த நைதுவஷந்தி சுதர்ஷினி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார். 

கடந்த சனிக்கிழமை மாலை இவர் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் காலி போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவை பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இவர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.