(நா.தனுஜா)

அரசாங்கம் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக 2019ஆம் ஆண்டிற்கு 2 ஆயிரத்து 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. கடன் மீளச்செலுத்துகைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள மிக அதிகளாவான தொகை இதுவாகும் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 4 ஆயிரத்து 650 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கு 786 பில்லியன் ரூபா செலவிடப்படும். இதன் பொருட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மூலங்களிடமிருந்து 1,944 பில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், பாதீட்டுப் பற்றாக்குறையினை ஈடு செய்வதற்கும் அந் நிதியினைப் பயன்படுத்த முடியும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.