மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மெகசின் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.

தமது வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரியே குறித்த 43 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.