போதை கலந்த மாவா பாக்கை உடைமையில் வைத்திருந்த நற்பிட்டிமுனை யுவதிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம்  10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 12 மாத கடூழிய சிறை தண்டனையும், 10000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் யுவதியின் இல்லத்தில் இருந்து 950 கிராம் மாவா பாக்கை கல்முனை பொலிஸார் கடந்த மாதம் கைப்பற்றியதுடன் யுவதியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜராக்கினர். 

யுவதி குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்வான் இந்த தண்டனையை வழங்கினார்.