கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட  ராமநாதபுரம் மீனவர்களின்  படகை ஒப்படைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவருக்குச் சொந்தமான இரண்டு நாட்டுப்படகுகளுடன் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜூட்சன்  இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட கூடாது என எச்சரித்து இரண்டு படகையும் விடுவித்து உத்தரவிட்டார்.

 விடுதலை செய்யப்பட்ட நாட்டு படகுகள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.