களனி கேபிள்ஸின் சிறந்த விற்பனை ஊக்குவிப்பு அதிகாரிகளுக்கு கௌரவிப்பு 

Published By: Priyatharshan

14 Mar, 2016 | 12:16 PM
image

களனி கேபிள்ஸ் பிஎல்சி தனது விற்பனை ஊக்குவிப்பு அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில், வருடாந்த பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

நிறுவனத்தின் வலிமையான விற்பனை வலையமைப்பில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்வு சிலாபம் அனந்தயா ஹோட்டலில் நடைபெற்றது. 

இதில் களனி கேபிள்ஸ் பிஎல்சி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மஹிந்த சரணபால, சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க, பிரதம நிதி அதிகாரி ஹேமமாலா கருணாசேகர மற்றும் சகல பிரிவுகளின் முகாமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வில், தர்ஷன கம்லத் (மேல் வலயம் 2) சிறந்த வலய விற்பனை முகாமையாளருக்கான விருதை பெற்றுக் கொண்டார். சிறந்த விற்பனை அபிவிருத்தி அதிகாரிக்கான விருதை மலிந்த கருணாநாயக்க பெற்றுக் கொண்டார். 

செயற்திட்டங்கள் பிரிவில் சிறந்த நிறைவேற்று அதிகாரிக்கான விருதை ரொஷான் டி சில்வா பெற்றுக் கொண்டார்.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் மூலமாக களனி கேபிள்ஸின் வெற்றிகரமான செயற்பாடு உறுதி செய்யப்பட்டிருந்தது. நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கி வரும் ஆர்வமுள்ள ஊழியர்களின் செயற்பாடுகளையும் கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

“இது போன்ற விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் மூலமாக எமது சிறந்த ஊழியர்கள் கௌரவிக்கப்படுவது மட்டுமல்லாது, ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

இதன் மூலமாக சக ஊழியர்களுக்கு வெற்றியீட்டியவர்களை பாராட்டி கௌரவித்து தாமும் ஊக்கத்துடன் செயலாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஊக்குவிக்கும் செயற்பாடாகவும் நலன் விரும்பிகளுக்கு சிறந்த உத்வேகமாகவும் அமைந்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார். 

சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 

“களனி கேபிள்ஸ் பிஎல்சி விற்பனை செயலணி என்பது இலங்கையில் களனி கேபிள்ஸை முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் கேபிள்களாக நிலை நிறுத்துவதற்கு உதவியாக அமைந்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் நாம் அவர்களுடன் இரு நாட்களை மகிழ்ச்சிகரமாக செலவிடுகிறோம், இதன் மூலம் அவர்கள் வழங்கி வரும் சிறப்பான சேவைகளுக்கு அவர்களை ஊக்குவிக்கிறோம். மேலும், அவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம். இந்த செயற்பாடுகள் மூலமாக அவர்களுக்கு எதிர்காலத்தில் சிறப்பாக செயலாற்றுவதற்கு அவசியமான மனநிலையை வழங்கும்” என்றார்.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 

“இலங்கையில் சகல இல்லங்களும் அறிந்த நாமமாக களனி கேபிள்ஸ் வர்த்தக நாமம் அமைந்துள்ளது. எமது தயாரிப்புகளின் தரம் மற்றும் அதிகரித்துச் செல்லும் விற்பனை புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி, அர்ப்பணிப்பாக செயலாற்றும் ஊழியர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளும் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. சகல விற்பனை பிரதிநிதிகளுக்கும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது” என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி “சுப்பர் பிரான்ட்” நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 

2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. 

களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

2015 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனி கேபிள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதையும் தனதாக்கியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58