இலங்கையில் இடம்பெற்ற காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்த நிகழ்வுகள்..!

Published By: J.G.Stephan

03 Oct, 2018 | 12:50 PM
image

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்த கொண்டாட்டங்களின் ஆரம்பத்திற்கான ஒரு தொடரான நிகழ்வுகள் இம் மாதம் (02-10-2018) ஆம் திகதியன்று நடைபெற்றன. 

அடுத்த இரண்டு வருடங்களின் போது காந்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் தொடர்பானவை மீது கவனம்
செலுத்தும் மேலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


மகாத்மா காந்தி 1927 இல் இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது இங்கு அதிளவிற்கு பயணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு விசேட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பிரபல்யமான இசைக் கலைஞர்களான பாத்திய, சந்தோஷ் மற்றும் உமாரியா தோன்றி காந்தியினால் விரும்பப்பட்ட “வைஷ்ணவ ஜன” எனும் பஜனைப் பாடுகின்ற ஒரு விசேட காணொளியை இந்திய உயர் ஸ்தானிகராலயம் உருவாக்கியது. 

குறித்த காணொளி நிகழ்வில் ஜனாதிபதியினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.  இந்திய உயர் ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகாத்மா காந்தியின் ஓர் உருவப் படத்தைப் பரிசளித்தார். 

ஜனாதிபதி சிறிசேன இந்திய உயர் ஸ்தானிகரிற்கு நன்றி தெரிவித்ததுடன் காந்திஜியின் உருவப்படம் ஜனாதிபதி அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவித்தார்.

காந்திஜிக்கான ஓர் அஞ்சலியாக, அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு தொகுதி விசேட ஞாபகார்த்த முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

சுவாமி விவேகானந்த கலாச்சார நிலையத்தில் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்  சம்பத் பண்டாரவினால் இலங்கையில் காந்தியின் விஜயம் பற்றி நன்கு ஆராய்ந்து சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வயலின் இசை வித்தகர் மாஸ்ட்ரோ கலாநிதி. எல். சுப்பிரமணியனினால் ஒரு விசேட இசை நிகழ்ச்சியும் மற்றும் தேசிய லெய்ப்ஜா லட்வியன் குழுமத்தினரின் இசைலயச் சங்கமமும் மாலைப் பொழுதில் தாமரைத் தடாக அரங்கில் நிகழ்வுற்றது. 

இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ஆளுனர் ஹேமக்குமார நாணயக்கார மற்றும் கலாச்சார, தொழில்துறைசார், கல்வி மற்றும் வர்த்தகத் துறைசார்ந்த மதிப்பு மிக்க பிரபல்யமானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56