இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நெருக்கடி நிலையில் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை தன்னிடம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி முயற்சி குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதவாது இங்கிலாந்துடனான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு செலுத்தப்படவிருந்த தொகையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குக்கு பதிலாக தனிப்பட்ட கணக்கொன்றுக்கு மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சி குறித்து தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியே அமைச்சர் பைஸர் முஸ்தபா பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு நிதிமோசடி செய்யப்படவிருந்த பணத் தொகை 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.