(எம்.சி.நஜிமுதீன்)

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் பதினான்கு மாத காலம் உள்ளது. எனினும் அது வரையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆட்சி நடத்துவற்கு இடமளிக்க முடியாது. 

ஆகவே விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம். அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விரும்பும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதனை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளேன்.