மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 52 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் சற்று முன்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பில் ஐநாவில் உரையாற்றிய பின்னர் இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தியை பெங்களுர் விமானநிலையத்தில் குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்திருந்தனர்.

எனினும் முதலில் இவரை நீதிமன்ற காவலில் எடுக்க நீதிமன்றம் மறுத்தது.அதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார் எனினும் உடனடியாக கைதுசெய்யப்பட்டார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை திருமுருகன் காந்தியின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில்அவரிற்கு பிணைவழங்கப்பட்டதை தொடர்ந்து  திருமுருகன் காந்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.