இலங்கை மின்சார சபையின் அனைத்து உப மின் நிலையங்களிலும் இராணுவத்தினரை பாதுகாப்புக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார். 

கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் நேற்று மூன்றாவது முறையாகவும் இலங்கை முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.