(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதியின் உரையை விளங்கிக்கொள்ளாதவர்களே விமர்சித்து வருகின்றனர். யுத்தத்தின் இறுதி வாரத்தில் பொறுப்புக்கூறக் கூடியவர்கள் நாட்டில் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதற்காக யுத்தத்தை தானே வழிநடத்தியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஜனாதிபதி தொடர்பாக சரத்பொன்சேக பகிரங்கமாக விமர்சிப்பது அரசாங்கத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் பிரதமர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் ஜனாதிபதி அமெரிக்காவில் தெரிவித்த கருத்துக்கள் உண்மையாகும். ஆனால் அதனை அரைகுறையா விளங்கிக்கொண்டவர்களே விமர்சித்து வருகின்றனர் என்றார்.