மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழக மக்களுக்கு தீங்கு இழைக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும்.

தமிழகதில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிந்தால் கொடுக்கலாம். திமுக ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளது. அதனை நாங்கள் முறியடிப்போம். மத்திய அரசு கொள்கை ரீதியாக எய்ம்ஸ் வைத்தியசாலை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முறைப்படி மத்திய அமைச்சரவை கூடி அங்கீகாரம் அளிக்கவேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும்.‘ என்றார்.