(இராஜதுரை ஹஷான்)

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரரின் விடுதலை தொடர்பில் அரசியல்வாதிகளை நம்பி எவ்விதமான பலனும் கிடைக்கப்பெறாது. இவரது விடுதலையில்  பௌத்தமத  மகாநாயக்கர்களே நேரடியாக தலையிட வேண்டும்  என  பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரரது விடுதலை தொடர்பில் நாளை பொதுபல சேனா அமைப்பின் முக்கிய தரப்பினரும்,   ஏனைய  பௌத்தமத பீட முக்கியஸ்தர்களும்  அஸ்கிரிய மல்வத்து  மகாநாயக்கரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது பல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் பொதுபலசேனா அமைப்பின்  பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெளியில் இருந்து உணவைக் கொண்டு வருவதற்கான அனுமதிக் கோரப்பட்டுள்ளது.

ஞானசாரருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இந்தக் கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.