சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா“ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜலுக்கு கோவை மாவட்ட பெண் வேடம்.இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை.

வில்லனாக மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவ், ஆஸ்திவா, குருஷேத்ரா, நிடான், பிதா உட்பட 23 படங்கள் இயக்கி உள்ளார். அத்துடன் தபாங், காண்டே வாண்டட், ஸ்லம் டாக் மில்லியனர், ரெடி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், கருணாஸ் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன்

இசை - கிரிநந்த்

கலை - மாயா பாண்டி

நடனம் - ஷோபி

ஸ்டன்ட் - அனல் அரசு

எடிட்டிங் - ஆண்டனி

தயாரிப்பு நிர்வாகம் - A.வெங்கட்

தயாரிப்பு - சில்வர்லைன் பிலிம்பேக்டரி.

கதைஇ திரைக்கதைஇ வசனம் எழுதி இயக்குகிறார் - திரு. இவர் இயக்கும் 5 வது படம் இது. “கருடா“ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1 ம் திகதி சென்னையில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது. பரபரப்பான ஆக்ஷன் படமாக “கருடா“ உருவாகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்