சமூக வலைத்தளங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வந்த ஆடம் முஸ்சேரி நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.

அமைப்பின் துணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரிகர் கடந்த வாரம் பதவி விலகினர்.

இந் நிலையிலேயே இன்ஸ்டாகிராம் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஆடம் முஸ்சேரி நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் புதிய நியமனம் குறித்து சிஸ்ட்ரோம் மற்றும் கிரிகர்,

“ஆடமின் தலைமைத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு புதிய நிர்வாக குழுவை நியமிப்பார்.

அவரது தலைமைத்துவத்தின் கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து முன்னேற்றமடையும்” என தெரிவித்துள்ளனர். 

ஒரு வடிவமைப்பாளராக தனது பணியை ஆரம்பித்த முஸ்சேரி 2008ஆம் ஆண்டு முகநூல் வடிவமைப்பு குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.