தனது பெயரை பயன்படுத்தி கேத்ரின் மயோர்கா புகழ்தேட முய்சிக்கின்றார் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 34 வயதுடைய கேத்ரின் மயோர்கா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜேர்மனி பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளிக்கும்போது தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமின்றி ரொனால்டோவுடன் கேத்ரின் மயோர்கா எடுத்திருந்த புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந் நிலையில் இது குறித்து முதற் தடவையாக வாய் திறந்துள்ள ரொனால்டோ, இது ஒரு கட்டுக்கதை, எனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன். ஆனால் அவை யாவும் உண்மைக்கு புறம்பானவை. அதுபோன்றதொரு வதந்தியே இவரின் கருத்தும் எனத் தெரிவித்துள்ளார்.