பலியானவர்களின் உடல்களை புதைக்கும் நடவடிக்கைகள் இந்தோனேசியாவில் ஆரம்பம்

Published By: Rajeeban

01 Oct, 2018 | 09:40 PM
image

இந்தோனேசியாவின்  இயற்கை அனர்த்தத்தினால் நிர்மூலமாக்கப்பட்டுள்ள பலுவில் பலியானவர்களை புதைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 850  என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை ஓன்றாக புதைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

முதலில் 300 பேரை புதைப்பதற்கான புதைகுழிகளை உருவாக்கியுள்ளோம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் மீட்பு பணியாளர்கள் இணைந்து 100 மீற்றர்  புதைகுழியொன்றை தோண்டியுள்ளனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேவைப்பட்டால் அதனை ஆழமாக்குவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார மற்றும் மத காரணங்களிற்காக இவற்றை உடடினயாக செய்யவேண்டியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஒருமருத்துவமனையிலிருந்து மாத்திரம் 550 உடல்களை கொண்டுவந்துள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

மலைப்பகுதிக்கு அருகில் உள்ள பொதுமயானத்தில் ஆயிரம் உடல்களை புதைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டிரக் ரக வாகனங்களில் உடல்கள் கொண்டுவரப்படுவதாகவும் தொண்டர்கள் அவற்றை புதைகுழிக்கு இழுத்து சென்று போட்ட பின்னர் மண்ணால் அவற்றை மூடுகின்றனர்  என பிபிசி தெரிவித்துள்ளது.

பலியானவர்களை உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக உடல்கள் அனைத்தும் புகைப்படமெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் ஒவ்வொரு உடலாக சென்று பார்ப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47