(ஆர்.விதுஷா)
அரசியல் கைதிகளின் விடுதலை போராட்டம் இலங்கையில் தொடர் ஏமாற்று போக்குடையதாகவே அமைந்துள்ளது. இதனால் எமது ஆயுட் காலத்தில் பெரும்பாலான பகுதியை சிறையிலேயே கழித்து விட்டோம் என மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் காணப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வண பிதா.எம். சக்திவேல உள்ளிட்டவர்கள் இன்று திங்கட்கிழமை காலை வெலிக்கடை, மெகசின் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளை சந்தித்தனர்.
இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளுடன் கருத்துக்களை கேட்டறிவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது .
இதன் போதே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM