ஜனாதிபதி செயலிலும் காட்டுவாரா? - மஹிந்த அணி கேள்வி 

By Vishnu

01 Oct, 2018 | 06:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள்  பொதுச்சபைக் கூட்டத்தில் பேச்சளவில் குறிப்பிட்ட விடயத்தை செயலிலும்  ஜனாதிபதி செயற்படுத்துவாரா  என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள்  பொதுச்சபை கூட்டத்தில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன    இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள எம்மால் முடியும். சர்வதேசங்கள் எவ்விதமான  அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டமை  வரவேற்கத்தக்கது. இருப்பினும் பேச்சளவில் குறிப்பிட்ட விடயத்தை செயலிலும்  ஜனாதிபதி செயற்படுத்துவாரா ?

இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் கடந்த காலங்களில் முன்வைத்த  குற்றச்சாட்டுக்களை தேசிய  அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை பழிவாங்க பயன்படுத்தக் கொள்ள முயற்சித்தது. ஆனால் அரசாங்கத்தின்   நோக்கம் அரசாங்கத்திற்கே  பல விளைவுகளை ஏற்படுத்தியது  எனவும் தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right