கணவனின் தீராத கள்ளக் காதல் மோகம்: மரணமே முடிவென உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி..!

Published By: J.G.Stephan

01 Oct, 2018 | 04:20 PM
image

ஜான்பால் பிராங்கிளின் (26) அந்த பகுதியில் பூங்கா காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24). இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.

அதேவேளை கள்ளக்காதலி மோகமும் அவரை விட்டுவைக்க வில்லை. அதே பூங்காவில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த பெண்ணின் காதல் வலையில் சிக்கினார் ஜான்பால்.

கள்ளக்காதலியே தஞ்சம் என்று அந்த பெண் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே புஷ்பலதா கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்.

அப்போது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் கணவரிடம் கேட்க முடியாமல் தவித்து இருக்கிறார். மனக்குமுறல் எப்படியாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும்.

நேற்று முன்தினம் மதியமே பிராங்கிளினுக்கு பணி முடிந்து விட்டது. ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவில்தான் வீட்டுக்கு வந்துள்ளார்.

கள்ளக்காதலியுடன் உறவாடி விட்டு வந்திருப்பதை அறிந்ததும் புஷ்பலதா ஆத்திரத்தில் பொங்கி எழுந்திருக்கிறார்.  வாக்குவாதம் முடிந்ததும் கோபத்தில் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.

அவரது கோபத்தை கள்ளக்காதலியின் மோகம் கட்டுப்படுத்தி இருக்கும். ஆனால் எந்த தவறும் செய்யாத புஷ்பலதாவின் ஆத்திரத்தை எது கட்டுப்படுத்தும்?

இதனால், மின் விசிறியில் தூக்கு போட்டு தன் உயிரையே முடித்துக் கொண்டார். வீடு திரும்பிய பிராங்கிளின் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் மனைவியை தேடி இருக்கிறார். வெற்றுடலாய் மின் விசிறியில் புஷ்பலதா தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், போலிசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தான் நடந்த விபரங்களை பிராங்கிளின் தெரிவித்து இருக்கிறார்.

தகாத உறவும் சரிதான் என்ற நீதிமன்ற தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதற்கு முதல் பலியாகி இருக்கிறார் புஷ்பலதா.

சட்டம் வேறு! நடைமுறை வாழ்க்கை வேறு! நடைமுறைக்கு ஏற்ற வகையில் சட்டம் வரலாம். சட்டத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறை வாழ்க்கையை மாற்ற இயலுமா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17