பிரவாசி பாரதீய திவாஸ் (PBD) வெளிநாட்டு இந்திய சமூகம் இந்திய அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை வலுப்படுத்துவதற்கும் மற்றும் அவர்களை அவர்களது வேர்களுடன் மீளிணைப்பதற்குமாக ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கொரு முறை கொண்டாடப்படுகிறது.

இந்த ஒன்று கூடுதலின் போது, தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியா மற்றும் வெளிநாட்டில் பல்வேறு துறைகளுக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்கு மதிப்பு மிகு பிரவாசி பாரதீய சம்மான் எனும் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவர்.

15 ஆவது பிரவாசி பாரதீய திவாஸ் ஒன்றுகூடுதல் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் 2019 ஜனவரி 21-23 நடைபெறும். இம்முறை 2019 ஆம் ஆண்டின் இவ்வொன்று கூடுதலின் கருப்பொருள் “புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் இந்தியப் புலம் பெயர்ந்தோரின் வகிபாகம்” என்பதாகும். பங்குபற்றுவோர்கள் ஹோட்டல்கள் அல்லது வாரணாசியிலுள்ள சுவிஸ் கொட்டகைகளில் தங்களது தங்குதலைத் தெரிவு செய்வதற்கான தெரிவைக் கொண்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ பிரதிநிதிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட, அனைத்துப் பங்குபற்றுவோர்களுக்கும் PBD 2019 ஒன்று கூடுதலுக்காகப் பதிவு செய்தல் கட்டாயமானதாகும். 

பதிவு செய்வதற்கு  http://www.pbdindia.gov.in. எனும் இணையத்தளத்தின் மூலம் மட்டுமானதாகும். PBD 2019 ஒன்றுகூடுதலிற்கு பிரதிநிதியாக/பங்குபற்றுனராக பதிவு செய்வதற்கான இறுதித் திகதி 15 நவம்பர்  2018 ஆகும். பதிவு செய்தல், நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கொடுப்பனவு விபரங்கள் இணையத்தளத்தில் கிடைக்கப் பெறலாம்.

ஆர்வங் கொண்டவர்களுக்கு, பிரயாகிராஜில் 24 ஜனவரி அன்று நடைபெறும் கும்பமேளா வைபவம் மற்றும் 26 ஜனவரியன்று புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா வைபவத்தில் கலந்து கொள்வதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பமேளாவில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்பவர்களுக்கு சங்கத்திற்கு அருகிலுள்ள பிரயாக்கிராஜில் கொட்டகைத் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்படும். பிரயாக்கியராஜிலான தங்குமிட வசதிகள் மற்றும் குடியரசு தின வைபவத்திற்கான அனுமதிகள் என்பவை மட்டுப்படுத்தப்பட்டவை என்பதால் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முதலில் எனும் அடிப்படையில் அவை வழங்கப்படும். வாரணாசியில் காசி விஸ்வநாத ஆலய விஜயம் மற்றும் கங்கை நதி ஆரத்தி உட்பட, வாரணாசி மற்றும் பிரயாக்கியராஜ் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தலுக்காக சுற்றுலா வழிகாட்டியுடன் கூட்டிச் சென்று கூட்டி வருவதற்கான உள்ளூர் போக்குவரத்து உள்ளது.

பங்குபற்றுவோர்கள் பிரயாக்கியராஜிற்கு விசேட வோல்வோ சொகுசு வண்டிகளில் கூட்டிச் செல்லப்பட்டு டெல்லிக்கு விசேட குளிரூட்டிய ரயில்களில் மீள அழைத்து வரப்படுவர். குடியரசு தின அணிவகுப்பு வைபவத்தில் அவர்களது பங்கு பற்றுதலுக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. PBD 2019 இன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாச்சார மாலைப் பொழுதுகள் மற்றும் கண்காட்சிகள் மூலமாக செழுமையான இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றையூம் புலம்பெயர் பங்குபற்றுவோர்கள் அனுபவிப்பர். விபரமான நிகழ்ச்சித்திட்டம் உட்பட மேலதிக விபரங்கள் http://www.pbdindia.gov.in. எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

பிரவாசி பாரதீய திவாஸ் ஒன்றுகூடுதலில் பங்குபற்றுவதற்கு ஆர்வங் கொண்ட இலங்கையிலுள்ள வெளிநாட்டு இந்திய சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் மேற் குறிப்பிட்ட இணையத்தளத்தை உபயோகித்து நிகழ்விற்காக தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கு அழைக்கப்படுகின்றனர்.