(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. கடந்த காலத்தில் தனி ஒரு நபரே பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை மேற்கொண்டிருந்தார் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.

குருவிட்ட பிரதேசத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், 

பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா தொடர்பான செய்திகளை அடிப்படையாகக்கொண்டே தேசிய பாதுகாப்பு தொடர்பாக சிலர் விமர்சித்து வருகின்றனர். 

அவ்வாறானதொரு நிலை இருக்குமானால் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.  அரசாங்கம் என்றவகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புக்கூற முடியும் என்றார்.