மார்புக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டுப் பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாகக் கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.