(ஆர்.ராம்)
ஊடக சுதந்திரமும் சமூகப்பொறுப்பும் பற்றிய கொழும்புப் பிரகடனம் கைச்சாத்திட்டப்பட்டு 20ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1998 ஆம் ஆண்டு ஏப்பரல் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1998 ஏப்ரல் 27 முதல் 29வரை நடைபெற்ற ஊடக சுதந்திரமும் சமூகப்பொறுப்பும் பற்றிய கருத்தரங்கின் இறுதியில் கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.
கருத்துக்களை வெளியிடுதல் மற்றும் ஊடக சுதந்திரத்தின் முன்னேற்றத்;துக்கு ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்புக்கான பொறுப்பினை மீண்டும் வலியுறுத்துவதற்காக சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்ரூபவ் பத்திரிகை உரிமையாளர்கள் சங்கம் என்பவற்றால் ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு பற்றிய கொழும்புப் பிரகடனம் முன்வைக்கப்பட்டது.
இவ்வமைப்புக்கள் பிரகடனத்தில் கைச்சாத்தும் இட்டிருந்தன. எனினும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் இந்தக் கலந்துரையாடல்களில் பங்குபற்றியதோடு, நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்ற பின் பிரகடனத்தில் கைச்சாத்திடுவதாக அறிவித்திருந்தது. பின்னர் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு பிரகடனத்தில் கைச்சாத்திட்டது. அத்துடன் 2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் ஆதரவுடன் கொழும்புப் பிரகடனம் மறுசீரமைக்கப்பட்டது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியோ போரம், தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் ஆகியன கொழும்புப் பிரகடனத்தின் இணைப் பங்காளிகளாக இருப்பதோடு சர்வதேச அமைப்புக்களில் உலக செய்திப் பத்திரிகைகள் சங்கம், சர்வதேச பத்திரிகைகள் நிலையம்ரூபவ் பொதுநலவாய பத்திரிகை ஒன்றியம், தென்னாபிரிக்க ஊடக நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் கொழும்புப் பிரகடனத்தை ஆதரிக்கும் அமைப்புகளாகவிருக்கின்றன.
இந்நிலையில் கொழும்புப் பிரகடனத்தின் இரண்டு தசாப்த நிறைவினை முன்னிட்டு நான்கு நாள் மாநாடு செப்டம்பர் 27 முதல் 30வரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊடகங்கள் தொடர்பான கருத்துருவாக்கங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலான தலைப்புக்களின் கீழ் 12அமர்வுகளாக நடைபெற்றன. இந்த சர்வதேச மாநாட்டிற்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், பத்திரிகை உரிமையாளர்கள் சங்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இலங்கை இதழியற் கல்லூரி, பொதுநலவாய ஊடக அறக்கட்டளை, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு, சர்வதேச ஊடகக் கல்லூரி ஆகியன கூட்டிணைந்து நடத்துவதோடு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, சீனா, ஜேர்மனி, இந்தியா, நோர்வே, பாகிஸ்தான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் அதன் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் அமர்வுகள்
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பு சினமன் கிராண்ட ஹோட்டலில் நடைபெற்றது. சமூக ஊடகங்களின் பெருக்கம்ரூபவ் ஊடகங்களின் அரசியல் மயமாக்கல் மற்றும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் கைகளில் ஒரு கருவியாக மாறுதல், போலித்தனமான செய்தி மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு போன்ற சிக்கல்களுக்கு தீர்வுகளைக் கண்டுபிடிப்பது அவசியம் என்ற இலக்கினை மையப்படுத்தி ஆரம்பமான இம்மாநாட்டின் அறிமுக அமர்வு காலை 9.30மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மெனிக் டி சில்வா, பத்திரிகை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்த்தன, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சி.தொடவத்த ஆகியோர் பங்கெடுத்த அமர்வொன்று நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் உரையாற்றுகையில், ஊடக தரப்புக்கள் ஒருமேடையில் அமர்ந்திருக்கின்றன மிக முக்கியமான தருணம் இதுவாகும். இவ்வாறான ஒருங்கிணைப்பினை கொழும்பு பிரகடனத்தினாலேயே மேற்கொள்ள முடிந்துள்ளது. மேலும் இலத்திரனியில் ஊடகக் தரப்புக்களையும் இணைத்து தொழில்வாண்மை மிக்க நிபுணத்துவத்தைக் கொண்ட வலுவான ஊடக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மெனிக் டி சில்வா, இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராகக் காணப்பட்ட மோசமான நிலைமைகளின் காரணமாக அனைத்துப் பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைய வேண்டிய நிலைமை ஏற்பட்டதை நினைவு கூர்ந்ததோடு ஊடக ஒழுக்ககோவை தாயரிக்கப்பட்டமை உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் தொடவத்த மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சம்பத் ஆகியோர், ஊடக நிறுவனங்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, காணாமலாக்கச் செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படாதுள்ளமையையும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும் சுட்டிக்காட்டினார்கள்.
அதனையடுத்து “1998ஆம் ஆண்டு கொழும்பு பிரகடனத்தினை மறுபரிசீலனை செய்தல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தல்” எனும் தலைப்பிலான அமர்வு பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜாவிட் யூசுப் நெறிப்படுத்தலில் ஆரம்பமானது. நோர்வே யூனியன் ஊடகவியலாளர் லிவ் எக்பேர்க் குறிப்பிடுகையில், 1936 ஆம் ஆண்டு நோர்வேயில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதோடு அதன் உறுப்பினர்களாக ஊடகத்தரப்பிலிருந்து நால்வரையும் பொதுமக்கள் தரப்பிலிருந்து மூவரையும் கொண்டதாக அக்குழு அமைந்திருக்கும். அத்துடன் ஊடக ஒழுங்குபடுத்தும் தரப்பு தனியாக இயங்குவதாகவும் தவறுகள் இழைக்கப்படுகின்றபோது அதனை நிவர்த்தி செய்வதற்காக வாசகர்களின் கருத்துக்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், பொதுமக்களின் சார்பான ஊடகங்கள் எவ்வளவு தூரம் செயற்படுகின்றன என்பது தொடர்பிலான விடயம் விவாதத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது. சில ஊடகங்கள் வேறுபட்ட மனோநிலையில் செயற்படுவதானது துரதிஷ்டவசமானது. ஊடகங்களின் பயனாளர்கள் பொதுமக்களே. ஆகவே அவர்களை மையப்படுத்தியே ஊடகங்கள் அனைத்தும் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதனையடுத்து பிரித்தானியாவின் அல்பானி சங்கத்தின் இணை நிறுவுனரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான டைட்ரர் லொரனானி, சேர்பியாவில் நடைபெற்ற ஊடக அடக்குமுறைகளால் அங்கு ஊடகங்கள் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியதோடு அங்கு ஊடகங்களை ஒர் அரங்கில் இணைத்த செயற்பாட்டின்போது தனது நேரடியான அனுபவத்தினையும் பகிர்ந்துகொண்டார். பிரித்தானியாவிலும் ஊடகங்கள் சுயகட்டுப்பாடுகளைப் பேணுவதில் சவால்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவின் கலாநிதி.சொடொமொ ஊடகக்கல்லூரியின் இயக்குநர் லுகாஸ் லுவார்சோ, பெருகிவரும் சமூக ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதானது தலையிடியாக மாறியுள்ளது. இவற்றினை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகள் போன்று இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தி கட்டக்குள் கொண்டு வந்தாலும் அது நீடித்தவொரு தீர்வாக இருக்கவில்லை என்று கவலை வெளியிட்டார்.
“பொதுச்சேவை எதிர் தனியார் ஒளிபரப்பு: குறைந்துவரும் தரநிலைகளை எவ்வாறு நிறுத்துவது” எனும் தலைப்பிலான அமர்வு இலங்கை இதழியல்கல்லூரியின் பணிப்பாளர் சபையின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வருண கருணாதிலகவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இலங்கை இதழியல் கல்லூரியின் தலைவர் ஷான்விஜேதுங்கரூபவ் சிலோன் டுடே பத்திரிகையின் ஆசிரியர்பீட பணிப்பாளர் அர்ஜுண ரணவன, இலங்கை ஒளிப்பரப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவி ஜயவர்த்தன, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் எம்.ஜே.ஆர்.டேவிட் ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கையில் உள்ள பொதுச்சேவை (அரச) ஊடகங்கள் மக்களின் பணத்திலேயே செயற்படுகின்றன. ஆகவே அந்த மக்களின் மீதே அவை அதிகளவான கரிசனையை கொண்டிருக்க வேண்டும். மேலும் இலங்கையில் அவ்வாறான நிலைமைகளை காணமுடியாத நிலவுகின்றது. ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் போக்குகளையே அரச ஊடகங்கள் கொண்டிருக்கின்ற நிலைமைகள் இருந்துள்ளன.
ஆகவே இத்தகைய போக்குகளை மாற்றியமைப்பதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக நிதிவழங்கப்பட்டு செயற்படும் வகையில் பொதுச்சேவை ஊடகங்கள் அமையப்பெறுவது சிறந்தது என்ற கருத்தாடலுடன் தற்போது ஒளிபரப்புக்கான அலைவரிசைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதோடு தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிபத்திரங்களை மீளாய்வு செய்யவேண்டும். அனுமதிபத்திரங்கள் வழங்குகின்றபோது பணத்திற்கு முன்னுரிமை அளிக்காது அனுமதியை கோரும் நபரின் நோக்கம்ரூபவ் குணாம்சங்கள் போன்றவற்றை ஆராயப்பட வேண்டும். மேலும் இலத்திரனியல் ஊடகங்களைக் கண்காணிக்கும் சுயாதீன கட்டமைப்பு ஒன்றை அமைப்பதன் மூலம் அதன் தரத்தினைப் பேணமுடியும் என்ற கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து “முதலில் பாதுகாப்பு” என்ற தலைப்பிலான அமர்வினை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஏ.எப்.பி செய்திசேவைப் பிரிவின் தலைவர் அமல்ஜயசிங்க நெறிப்படுத்தினார். பங்களாதேஷின் பிரத்தோம் அலோ ஊடகத்தின் இணை ஆசிரியர் எம்.ஆர்.கான், எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் பிரதிநிதி நபீஷா ஹசனோவா, சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சி.தொடவத்தரூபவ் சர்வதேச ஊடகக்கல்லூரியின் தலைமை ஆலோசகர் ரவிபிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சமயத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட ஊடகவியாலளர்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறாமை, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுள்ளாதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தென்னிலங்கையில் காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டப்பட்டன. இதன்போது, லங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு நிதி காணப்படுவதாகவும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றபோது அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அங்குரார்ப்பண நிகழ்வு
இவற்றைத்தொடர்ந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு பிற்பகல் 4.30 ற்கு ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதோடு, தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தோர்பியோன் காஸ்ட்ராட்ஷீதர், இலங்கை, இந்தியா, பூட்டான், மலைதீவுக்கான யுனெஸ்கோ இயக்குநர் எரிக் ஃபோல்ட், பொதுநலவாய ஊடக அறக்கட்டளையின் இயக்குநர் லெட்ண்ஷி ரொஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், இலங்கை பத்திரிகைப் பேரவை முற்றாக கலைக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடத்தில் கோரியதோடு பத்திரிகைகளை அச்சிடும் காகிதத்தின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கோரினார்.
யுனெஸ்கோ இயக்குநர் எரிக் ஃபோல்ட, 1998 பிரகடனத்தின் பிரகாரம் செய்தி ஊடகம், பன்முகத்தன்மையின் அடிப்படையில் பெண்கள் மற்றும் பிற குழுக்களின் எதிர்பார்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்தநிலைமைகள் மேலும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் அவசியம் என்றார்.
நோர்வே தூதுவர் தோர்பியோன் காஸ்ட்ராட்ஷீதர், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீணடகால உறவை பேணி வருகின்றமை குறித்து நாம் பெருமையடைகின்றோம். ஆசிய நாடுகளில் முதன்மையான நாடாகவும் இலங்கை முன்னேறிக் கொண்டிருப்பதோடு அண்மைகாலத்தில் சமூகப் பொறுப்புணர்வுக்கான ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பொதுநலவாய ஊடக அறக்கட்டளையின் இயக்குனர் லெட்ண்ஷி ரொஸ் கூறுகையில்,
செய்திகளை அதிகளவு விநியோகம் செய்யும் இலத்திரனியல் ஊடகங்கள் விரும்பியவாறு அவற்றை பிரசுரிக்கின்றன. குறிப்பாக சமூக ஊடகளின் செயற்பாடுகள் ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக உள்ளது. இது சமுகத்தில் சமச்சீர் அற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. அத்துடன் இத்தகைய ஊடகங்கள் பாரபட்சமற்றதாக இருக்க முயற்சிக்கவில்லை. இதனால் நிலையற்றதன்மை இயல்பாக ஏற்படுகின்றது என்றார்.
இதனையடுத்து அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில், உலகலாவிய ரீதியில் ஊடக சுதந்திர குறிகாட்டியில் 138 ஆவது நிலையிலிருந்த எமது நாடு 2018 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமையானது முன்னேற்றகரமான நிலையை நோக்கியே நகர்ந்து வருகின்றமையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.
இதனையடுத்து பிரதம அதிதி உரையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் ஜனநாயகம் உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டுமெனில் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட்டிருக்க வேண்டும். ஆகவே உண்மையான செய்திகள் மக்களைச் சென்றடையும்போதே ஜனநாயகம் வலுவடையும். மக்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை ஊடகங்களால் மாத்திரமே இல்லாமல் செய்ய இயலும் என்றார்.
அதனையடுத்து உரையாற்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு இரண்டு தசாப்த காலத்தில் அதிகளவாக 14 ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். ஒரு ஊடக நிறுவனம் மீது 33 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் இடம்பெறாமை வெட்கப்படவேண்டியதாகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM