நாட்டைச்  சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக  எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டின் பல பாகங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும். அத்துடன் நாட்டை சூழவுள்ள கடல்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 15 தொடக்கம் 30 கிலோமீட்டர் வரையில்  வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரசேங்களில் தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தற்போது  நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி  கிடைக்கப் பெறுவதுடன்  வட மத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் நாடு பூராகவும் அனேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகணங்களிலும்  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு  வரையான கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் அதிகமான மழைவீழ்ச்சி பெய்ய கூடும் .

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்கிழக்கு திசையிலுள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளிலும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

நாடு முழுவதுமுள்ள கடற்கரை பிரதேசங்களில் குறி;ப்பாக மேற்கிலிருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட திசையில் காற்று பயணிக்கும் போது காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 15 தொடக்கம்   30 கிலோமீற்றராக  அதிகரித்து காணப்படும். 

பதுளை, காலி, கண்டி, கேகாலை, குருணாகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 100 தொடக்கம் 150 மீல்லி மீற்றர்  வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும்   எதிர்பார்க்கப்படுகின்றது,      

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.