(ஆர்.யசி)

ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பிர­க­டனம் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருடப் பூர்த்தி நிகழ்­வுகள் கடந்த வியா­ழக்­கி­ழமை சினமன் கிராண்ட் ஹோட்­டலில்  ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. யுனெஸ்கோ நிறு­வ­னத்தின் நிதி உத­வியில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் ஏற்­பாட்டில் பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம், சுதந்­திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் ஆகியன இணைந்து கொழும்பில் நடத்­திய இந் நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்கள், அரச பிர­தி­நி­தி­களும் மற்றும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கலந்­து­ கொண்­டனர்.  

கடந்த இரு­பது வரு­ட­ கால ஊடக நகர்வில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்கள் மற்றும் ஏற்­பட்ட சாதக பாத­கங்கள் குறித்து கடந்த மூன்று நாட்­களும்  மாநாட்டில் உள்­நாட்டு, வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் அடுத்த கட்­ட­மாக முன்­னெ­டுக்க வேண்­டிய திட்­டங்கள், ஆரோக்­கி­ய­மாக ஊடகத் துறையைக் கையாளும் வேலைத்­திட்­டங்கள் மற்றும் எதிர்­கால அச்­சு­றுத்­தல்­களில் இருந்து ஊட­கங்­களை எவ்­வாறு பாது­காத்தல் என்ற விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. 

இந்­நி­லையில் கொழும்புப் பிர­க­டன மாநாட்டின் இறு­தி­ நா­ளான  நேற்று காலை இலங்கை  பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தில் இடம்­பெற்ற நிகழ்­வின்­போது ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பிர­க­டனம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. 

ஊட­கத்­து­றையைப் பாது­காக்கும் சவால்­களை வெற்­றி­கொள்ளும் வகையில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம், பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம், சுதந்­திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் இணைந்து இந்தப் பிர­க­ட­னத்தில் கைச்­சாத்­திட்­டனர். இந்­நி­கழ்வில் இலங்கை பத்­தி­ரிகை வெளியீட்­டாளர் சங்­கத்தின் தலைவர் ரஞ்சித் விஜே­வர்­தன,  பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்­கத்தின் தலைவர் மெனிக் டி சில்வா, சுதந்­திர ஊடக இயக்­கத்தின் தலைவர் சி.தொட­வத்த, உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்­கத்தின் தலைவர் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர். 

இந்த நிகழ்வில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொபி மெண்டல் ஆகியோரும் பங்கேற் றிருந்தனர்.