கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓரஹஸ்மன்ஹன்தெனிய, ரத்தொட்டுவில பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட  இரு ஆண்களும் 27 மற்றும் 37 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.