இந்தோனேசிய இயற்கை அனர்த்தம் -பலி எண்ணிக்கை 850 ஆக அதிகரித்தது.

Published By: Rajeeban

30 Sep, 2018 | 05:36 PM
image

இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் தாக்கப்பட்ட பலுவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் துணைஜனாதிபதி யூசுவ் கலா இதனை உறுதி செய்துள்ளதுடன் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை 350,000 அதிகமான மக்கள் வசித்த பலு நகரத்தில் பெரும்பான்மையானவர்களை காணவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் பலர் இடிபாடுகளின் கீழ் சிக்குண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதியை மீட்பு பணியாளர்கள் இன்னும் சென்றடையாததன் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலு நகரில் இடிபாடுகளிற்குள் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக கைகளை பயன்படுத்தி நிலங்களை தோண்டும் முயற்சிகளும்  இடம்பெறுகின்றன.

இடிபாடுகளை அகற்றி உயிருடன் சிக்குண்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கும் பலியானவர்களின் சடலங்களை அகற்றுவதற்கும் எங்களிற்கு தற்போது  பாரிய இயந்திரங்கள் தேவை என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் தெரிவித்துள்ளன

இதேவேளை பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரான டொன்கலாவில்  ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகததை மீட்பு பணியாளர்கள்; சுட்டிக்காட்டியுள்ளனர்

இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை குழு இயற்கை அனர்த்தம் காரணமாக 1இ6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் பலியானவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இடிபாடுகள் வீதியை மூடியுள்ளதாலும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52