இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணியில் விளை­யாடும் முனிஸ் அன்­சாரி, இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்­கவைப் போன்று பந்­து­வீசி அனை­வ­ரையும் வியக்க வைக்­கிறார்.

கடந்த 9ஆம் திகதி அயர்­லாந்து அணிக்கு எதி­ராக நடந்த தகு­திச்­சுற்றுப் போட்­டியில் பந்­து­வீச்சில் மிரட்­டிய ஓமான் அணியின் முனிஸ் அன்­சாரி அயர்­லாந்து அணியின் 3 முக்­கிய முன்­வ­ரிசை வீரர்­களை வீழ்த்­தினார்.

இந்தப் போட்­டியில் ஓமான் 2 விக்­கெட்­டுக்­களால் அயர்­லாந்தை வீழ்த்­தி­யது. இந்தப் போட்­டியில் முனிஸ் அன்­சா­ரியின் பந்­து­வீச்சு அனை­வரின் கவ­னத்­தையும் ஈர்த்­தது.

இந்­தி­யாவின் மத்­திய பிர­தேச மாநில தலைநகர் போபாலில் பிறந்த முனிஸ் அன்­சா­ரிக்கு இந்­திய கிரிக் கெட் அணியில் விளை­யாட வேண்டும் என்­பது கன­வாக இருந்­ததாம். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்­காத நிலையில் தற்­போது ஓமான் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.