மலையக பிதேசங்களில் பெய்த நேற்று பெய்த கடும் மழை காரணமாக  அக்ரகுணை பிரதேசத்தில் ஏ9 வீதி சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நீரில் மூழ்கியது.

அக்குரணை 6 ஆம் கட்டை பிரதேசம் முதல் ஏழாம் கட்டை பிரதேசம் வரை  சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 350 க்கும் அதிகமான வியாபார  நிலையங்களும் வீடுகளும்  நீரிழ்  பகுதியளவு மூழ்கி  பாதிக்கப்பட்டதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பொலன்னறுவையில் இருந்து கண்டியை நோக்கி  பயணித்த பஸ் வண்டி ஒன்று வெள்ளத்தில் சிக்கியதையடுத்து பிரதேச மக்கள் கடும் முயற்சிக்கு மத்தியில் அதில் பயணித்த பிரயாணிகள்  காப்பாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.