வற்வரி அதிகரிக்கப்பட்டதன் மூலம் சகல பொருட்களின் விலைகளும் உயரும்

Published By: Robert

14 Mar, 2016 | 08:56 AM
image

வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­ட­தன்­மூலம் சகல பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­படும். இதனால் சாதா­ரண பொது மக்­களே பாதிக்­கப்­போ­கின்­றனர் என தேசிய தொழிற்­சங்க முன்­ன­ணியின் தலைவர் சமன் ரத்­ன­பி­ரிய தெரி­வித்தார்.

வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­வதன் மூலம் மக்­க­ளுக்கு ஏற்­ப­டப்­போகும் பாதிப்பு குறித்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் இது குறித்து தொடர்ந்து கூறு­கையில்,

அர­சாங்கம் அண்­மையில் வரி அற­வீட்டில் திருத்தம் ஒன்றை மேற்­கொண்­டது. அத­ன­டிப்­ப­டையில் வற் வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வரு­மான வரியில் மாற்றம் செய்­துள்­ளது. அத்­துடன் மூல­தன வரி என்று புதிய வரியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அர­சாங்கம் கடந்த வரவு செலவு திட்­டத்தில் வரியில் சில வரை­றை­களை மேற்­கொண்­டி­ருந்­தது. என்­றாலும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையின் மூலம் அந்த வரை­ய­றை­க­ளை­விட சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

வற்­வரி ஆரம்­பத்தில் 8வீதம் முதல் 11.5 வீதம் வரையே இருந்து. தற்­போது இதை 15வீதம் வரை அதி­க­ரிக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் அத்­தி­யா­வ­சிய பொருட்கள் மற்றும் மின்­சாரம் ஆகி­ய­வற்­றுக்கு வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தில்­லை­யென அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. அத்­தி­யா­வ­சிய பொருட்கள் என்ன என்­பதை பட்­டி­ய­லிட்டு அர­சாங்கம் வர்த்­த­மானி மூலம் அறி­விக்க வேண்டும். அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு வரி விதிக்­கப்­ப­டா­தது சிறந்த விடயம் என்­றாலும் வரி அதி­க­ரிப்­பா­னது மக்­க­ளுக்கு பாரிய சுமை­யாகும்.

வற்­வரி எனும் பெறு­மானம் சேர் வரி சகல பொருட்­க­ளுக்கும் சேவை­க­ளுக்கும் அடங்­கு­கின்­றது. அர­சாங்கம் அறி­விக்கும் பொருட்­களை தவிர ஏனைய சகல பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­படும் அதே­போன்று சகல சேவை­களின் கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கப்­படும்.

இது அரச, தனியார் துறை என்­றில்­லாமல் சகல மக்­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். பொருட்கள் மற்றும் சேவை­களின் விலை உயர்­வா­னது மக்­க­ளுக்கு தாங்­கிக்­கொள்ள முடி­யா­த­தொன்­றாகும். எனவே அர­சாங்கம் வற்­வ­ரியில் அதி­க­ரிப்பை மேற்­கொள்­ளக்­கூ­டாது.

அதே­போன்று அர­சாங்கம் வரு­மான வரியில் சிறி­யதோர் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆரம்­பத்தில் அரச, தனியார் சேவை­யா­ளர்கள் வரு­டத்­துக்கு 7 1/2 இலட்­சத்­துக்மேல் வரு­மானம் பெற்றால் அதில் 4வீதம் முதல் 16வீதம் வரை வரு­மான வரி அற­வி­டப்­பட்­டது. கடந்த வரவு செலவு திட்­டத்தில் மொத்த வரு­மான வரியை 15வீத­மாக்­கி­யது. அதா­வது வரு­டத்­துக்கு 2இலட்சம் வரு­மா­ன­மாக பெறு­வோ­ரிடம் இந்த வரி அற­வி­டப்­பட்­டது. தற்­போது இந்த வரு­மான வரி 17வீத­மா­கி­யுள்­ளது.

அர­சாங்கம் கடன் சுமையில் இருந்து மீள்­வ­தற்கு இந்த வரி விதிப்பை மேற்­கொள்­வ­தாக கூறு­கி­றது. ஆனால் வரு­மான வரி மூலம் பெறப்­படும் வரு­மானம் அரச வரு­மா­னத்­துக்கு குறிப்­பிடும் அளவு தொகையை வழங்­கு­வ­தில்லை. மாறாக வற்­ வரி மூலமே கூடு­த­லான வரு­மானம் கிடைக்­கின்­றது.

அதே­போன்று மூல­த­ன­வரி என்று ஒன்றை அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதா­வது எம்­மிடம் இருக்கும் சாதா­ரண காணி­யொன்றின் பெறு­மதி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்கள் கார­ண­மாக அதிகரிக்கின்றது. இந்த அதிகரிப்புக்கு வரி அறவிடப்படும். இவ்வாறான வரி உலகில் வேறு நாடுகளிலும் அறவிடப்படுகிறது. இந்த வரியை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் வற்வரி தொடர்பாக அரசாங்கம் மீண்டும் திருத்தம் மேற்கொண்டு சாதாரண மக்கள்மீது பொருளாதார சுமையை ஏற்படுத்தாதவாறு நடவடிக்ககை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44