இலங்கையின் கௌர­வத்தை கேள்விக் குறி­யாக்கும் வெளி­நாட்டுத் தேவையை நிறை­வேற்­றவே முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத்­பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றினார் எனக் குற்­றம்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம், யுத்­தத்தை முடித்­தவர் யார் ? என்ற கௌர­வத்தை தான் பெற்­றுக்­கொள்­வ­தற்கு சரத்­பொன்­சேகா முயற்­சித்­துள்ளார் என்றும் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்­டர். வசந்த பண்­டார மேலும் கூறு­கையில்,

சரத்­பொன்­சே­காவின் பாரா­ளு­மன்ற உரை­யா­னது குரோத மனப்­பான்­மை­யு­ட­னான மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையும்,

கோத்­தாப ராஜ­ப­க்ஷ­வையும் பழி­வாங்கும் விதத்­தி­லான உரை­யாகும். இவ­ரது உரை­யினால் நாட்டின் கௌரவம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை நாட்டின் கௌர­வத்தை பாதிக்கும் விதத்தில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அடித்­த­ளத்தை போட்டுக் கொள்­வ­தற்­காக சரத்­பொன்­சே­கா­வை வெளி­நா­டுகள் பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளன என்றே கூற வேண்டும். அவ­ரது உரை­யா­னது முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியின் உரை­யாக இல்லை. மாறாக பழி­வாங்கும் எண்­ணத்­து­ட­னான உரை­யா­கவே உள்­ளது.

யுத்தம் முடிந்­து­விட்­டது இனி இரு தரப்­பி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்பை வழங்கி நல்­லி­ணக்­கத்­திற்கு வித்­திட வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவில் உண்­மையை கண்­ட­றியும் விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த பின்னர் இவ்­வா­றான நிலையே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மூலம் நாட்டின் நிலை­யான சமா­தா­னத்­தையும், இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும். அதை­வி­டுத்து சரத்­பொன்­சே­காவின் உரை நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மாக அமைந்­துள்­ளது. இக் கருத்து சர்­வ­தேச விசா­ர­ணைக்கு சாட்­சி­யாக அமையப் போவ­தில்லை.

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் பிர­பா­கரன் உயி­ரோ­டி­ருந்தார் என்ற சரத்­பொன்­சே­காவின் கூற்றை ஏற்­றக்­கொள்ள முடி­யாது. ஏனென்றால் யுத்தம் முடிவடைந்த போது சரத்பொன்சேகா உள்நாட்டில் இருக்கவில்லை. எனவே இது சாட்சியாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாட்டின் கௌரவத்திற்கு எதிரான சேறுபூசுவதாக அமையும் என டாக்டர். வசந்த பண்டார தெரிவித்தார்.