யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான் யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

என்னை பழி­வாங்கும் ஒரே நோக்­கத்தில் பிர­பா­க­ரனை மீண்டும் உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்­ச­ரி­ய­ம­டைய வேண்­டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்­களில் அந்த செய்­தியும் ஊட­கங்­களில் வெளி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்தம் தொடர்பில் அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தியும் இப்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் தொடர்பில் மஹிந்த ராஜ­பகஷ கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

என்னை பழி­வாங்­கவும் எனது குடும்­பத்தை தண்­டிக்­கவும் இந்த அர­சாங்கம் தீவி­ர­மாக முயற்­சித்து வரு­கின்­றது. நாம் செய்­யாத குற்­றங்­க­ளுக்­காக இன்று தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றோம். எனது புதல்வர் யோஷித செய்­யாத குற்­றத்­திற்­காக சிறையில் உள்ளார். ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் மற்­றைய புதல்வர் நாமல் ராஜபக்ஷவை கைது­செய்ய அர­சாங்கம் திட்டம் தீட்­டு­வ­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­வ­ரு­கின்­றன. அவ்­வாறு இருக்­கையில் இப்­போது பாரா­ளு­மன்­றத்தில் புதிய சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளனர்.

யுத்த கால­கட்­டத்தை நாம் எவ்­வாறு யுத்­தத்தை முன்­னெ­டுத்தோம், அதற்­கான செல­வுகள் என்ற அனைத்தும் சரத் பொன்­சே­கா­வுக்கு நன்­றா­கவே தெரியும். அவர் அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி என்ற வகையில் எமக்கு பூரண ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டார். அதை நான் மறைக்­காமல் கூறி­யா­க­வேண்டும். ஆனால் அதையும் தாண்டி அவர் தனிப்­பட்ட ரீதியில் செய்த தவ­றுகள் தொடர்­பிலும் எம்­மிடம் பதி­வுகள் உள்­ளன. அந்த கார­ணி­களை எல்லாம் நாம் ஊட­கங்­க­ளிடம் முன்­வைத்தால் இன்று அவ­ருக்கு இருக்கும் கொஞ்ச மரி­யா­தையும் பறி­போய்­விடும்.

எவ்­வாறு இருப்­பினும் அவர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­து­களை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதேபோல் யுத்தம் எப்­போது முடி­வுக்கு வந்­தது, பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டரா இல்­லையா என்ற தக­வலும் எனக்குத் தெரியும். சரத் பொன்­சேகா மட்­டுமே எமக்கு தக­வல்­களை முன்­வைக்­க­வில்லை. இரா­ணு­வத்தின் பல வழி­களில் இருந்து எமக்கு த­க­வல்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு கிடைத்­துக்­கொண்டு இருந்­தன. சரத் பொன்­சேகா உத்­தி­யோ­க­பூர்வ ரீதியில் ஒரு அதி­காரி மட்­டு­மே­யாவர். அதை தவிர அவர் பல இர­க­சி­யங்­களை அறிந்­தி­ருக்­க­வில்லை.

இப்­போதும் கூட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனிப்­பட்ட பழி­வாங்கல் மற்றும் யுத்த குற்­றச்­சாட்­டு­களில் என்­னையும் கோத்­த­பாய ராஜபக்ஷவையும் தண்­டித்து பழி­வாங்­கப் பார்க்­கின்­றனர். அதற்கு உடந்­தை­யாக சரத் பொன்­சேகா செயற்­ப­டு­கின்றார். தேசி­யப்­பட்­டியல் மூலம் ரணில் வாழ்க்கை கொடுத்­துள்ளார். அந்த நன்­றிக்­கடன் இப்­போது வெளிப்­ப­டு­கின்­றது. பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட பின்­னரே நான் யுத்­தம் முடிவடைந்ததை அறி­வித்தேன். அவ­ரது உடலை எமது இரா­ணுவம் உறு­திப்­ப­டுத்­தி­யது. தலையில் துப்­பாக்கி ரவைகள் பட்ட நிலையில் தலை சிதை­வ­டைத்து கிடப்­ப­தாக புகைப்­ப­டங்­க­ளுடன் எனக்கு அந்த நேரத்­தி­லேயே இரா­ணுவம் தெரி­வித்­தது.

ஆனால் இவை நடந்த நேரம் சரத் பொன்­சேகா எம்­முடன் இருக்­க­வில்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர் கூறும் கதை­களை எவரும் நம்­பப்­போ­வதும் இல்லை. யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் என சித்­த­ரித்து எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யக்கும் முயற்­சி­களின் விளை­வு­களே இவை அனைத்துமாகும்.

அதேபோல் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நாம் பணம் கொடுத்­த­தா­கவும் சுனாமி உதவி நிதி என்ற பெயரில் நாம் புலி­களை பலப்­ப­டுத்­தி­ய­த­ாகவும் இன்று ஒரு சிலர் குற்றம் சுமத்­தி­வ­ரு­கின்­றனர். ஆனால் இது முழு­மை­யாக பொய்­யாகும். நாம் புலி­களை பலப்­ப­டுத்த நினைத்­தி­ருந்தால் பிர­பா­க­ரனை கொன்றி­ருக்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­காது. நாட்­டையும் மக்­க­ளையும் விடு­விக்­கவும் பல­மான நாடாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­ப­வுமே நாம் யுத்­தத்தை தைரி­ய­மாக எதிர்­கொண்டோம். எனக்கு முன்­னி­ருந்த தலை­வர்­களால் முடி­யாத காரி­யத்தை நாம் செய்­து­காட்­டி­யதே இன்று எவ­ராலும் பொறுத்­துக்­கொள்ள முடி­யாத காரி­ய­மாக மாறி­யுள்­ளது.

இப்போது இருக்கும் நிலைமையில் என்னை பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தாலும் ஆச்சரியமடையவேண்டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்களில் அந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரும். எமது ஆட்சியை வீழ்த்தி இப்போது உருவாகியுள்ள புதிய அரசாங்கம் முழுமையாக பழிவாங்கல் அரசியலை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்க பொய்யான ஆதாரங்களை திரட்டி தொடர்ச்சியாக எம்மை தாக்கி வருகின்றனர்.

யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான் யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

என்னை பழி­வாங்கும் ஒரே நோக்­கத்தில் பிர­பா­க­ரனை மீண்டும் உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்­ச­ரி­ய­ம­டைய வேண்­டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்­களில் அந்த செய்­தியும் ஊட­கங்­களில் வெளி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்தம் தொடர்பில் அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தியும் இப்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் தொடர்பில் மஹிந்த ராஜ­பக ஷ கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

என்னை பழி­வாங்­கவும் எனது குடும்­பத்தை தண்­டிக்­கவும் இந்த அர­சாங்கம் தீவி­ர­மாக முயற்­சித்து வரு­கின்­றது. நாம் செய்­யாத குற்­றங்­க­ளுக்­காக இன்று தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றோம். எனது புதல்வர் யோஷித செய்­யாத குற்­றத்­திற்­காக சிறையில் உள்ளார். ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் மற்­றைய புதல்வர் நாமல் ராஜபக்ஷவை கைது­செய்ய அர­சாங்கம் திட்டம் தீட்­டு­வ­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­வ­ரு­கின்­றன. அவ்­வாறு இருக்­கையில் இப்­போது பாரா­ளு­மன்­றத்தில் புதிய சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளனர்.

யுத்த கால­கட்­டத்தை நாம் எவ்­வாறு யுத்­தத்தை முன்­னெ­டுத்தோம், அதற்­கான செல­வுகள் என்ற அனைத்தும் சரத் பொன்­சே­கா­வுக்கு நன்­றா­கவே தெரியும். அவர் அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி என்ற வகையில் எமக்கு பூரண ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டார். அதை நான் மறைக்­காமல் கூறி­யா­க­வேண்டும். ஆனால் அதையும் தாண்டி அவர் தனிப்­பட்ட ரீதியில் செய்த தவ­றுகள் தொடர்­பிலும் எம்­மிடம் பதி­வுகள் உள்­ளன. அந்த கார­ணி­களை எல்லாம் நாம் ஊட­கங்­க­ளிடம் முன்­வைத்தால் இன்று அவ­ருக்கு இருக்கும் கொஞ்ச மரி­யா­தையும் பறி­போய்­விடும்.

எவ்­வாறு இருப்­பினும் அவர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­து­களை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதேபோல் யுத்தம் எப்­போது முடி­வுக்கு வந்­தது, பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டரா இல்­லையா என்ற தக­வலும் எனக்குத் தெரியும். சரத் பொன்­சேகா மட்­டுமே எமக்கு தக­வல்­களை முன்­வைக்­க­வில்லை. இரா­ணு­வத்தின் பல வழி­களில் இருந்து எமக்கு த­க­வல்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு கிடைத்­துக்­கொண்டு இருந்­தன. சரத் பொன்­சேகா உத்­தி­யோ­க­பூர்வ ரீதியில் ஒரு அதி­காரி மட்­டு­மே­யாவர். அதை தவிர அவர் பல இர­க­சி­யங்­களை அறிந்­தி­ருக்­க­வில்லை.

இப்­போதும் கூட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனிப்­பட்ட பழி­வாங்கல் மற்றும் யுத்த குற்­றச்­சாட்­டு­களில் என்­னையும் கோத்­த­பாய ராஜபக் ஷவையும் தண்­டித்து பழி­வாங்­கப் பார்க்­கின்­றனர். அதற்கு உடந்­தை­யாக சரத் பொன்­சேகா செயற்­ப­டு­கின்றார். தேசி­யப்­பட்­டியல் மூலம் ரணில் வாழ்க்கை கொடுத்­துள்ளார். அந்த நன்­றிக்­கடன் இப்­போது வெளிப்­ப­டு­கின்­றது. பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட பின்­னரே நான் யுத்­தம் முடிவடைந்ததை அறி­வித்தேன். அவ­ரது உடலை எமது இரா­ணுவம் உறு­திப்­ப­டுத்­தி­யது. தலையில் துப்­பாக்கி ரவைகள் பட்ட நிலையில் தலை சிதை­வ­டைத்து கிடப்­ப­தாக புகைப்­ப­டங்­க­ளுடன் எனக்கு அந்த நேரத்­தி­லேயே இரா­ணுவம் தெரி­வித்­தது.