அதிரடியாக ஆரம்பித்தாலும் இறுதியில் அடங்கிப் போனது பங்களாதேஷ் ; வெற்றியிலக்கு 223

Published By: Vishnu

28 Sep, 2018 | 08:34 PM
image

இந்தியாவுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் லிட்டன் தாஸ் மற்றும் மெய்டி ஹசான் ஆகியோர் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த போதும், அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் தகர்க்கப்பட்மையினால் பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பங்களாதேஷ் அணித் தலைவர் மோர்ட்டாஸாவை பணித்தார். இதற்கிணங்க லிட்டன் தாஸ் மற்றும் மெய்டி ஹசான் ஆகியோர் களமிங்கினர்.

இவர்களின் இணைப்பாட்டமே அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்திய அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை கண்டு நிலை தடுமாறாமல் அனைத்து பக்கங்களிலும் அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை முதல் 10 ஓவர்களில் 65 ஆனது. லிட்டன் தாஸ் 47 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் 16 ஓட்டத்துடனும் ஆட்டம் காட்டி வந்தனர்.

இந் நிலையில் லிட்டன் தாஸின் ஒட்ட எண்ணிக்கை 48 ஆக இருந்தபோது 11.1 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச அரைசதம் கடந்தார்.  11.3 ஆவது ஓவரில் ஜடேஜாவின் பந்தை உயர்த்தி அடிக்க பிடியெடுக்கும் வாய்ப்பொன்று கைகூடியது. எனினும் அந்த வாய்ப்பினை சஹால் தவற விட்டார்.

இந்த அதிர்ஷ்டம் பங்களாதேஷ் அணிக்கு ஒரு வாய்ப்பாக போக 17.5 ஆவது பந்தில் பங்களாதேஷ் அணி 100 ஓட்டங்களை கடந்த நிலையில் 20.5 ஆவது ஓவரில் மெய்டி ஹசான் 32 ஓட்டத்துடன் கேதர் யாதவ்வின் பந்து வீச்சில் ராயுடுவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து அடுத்தடுத்து பங்களாதேஷ் அணியின் 4 விக்கெட்டுக்கள் 31 ஓட்டத்துக்குள் சரிய ஆரம்பித்தன. அதன்படி இம்ருல் கைஸ் 2 ஓட்டத்துடனும், முஷ்பிகுர் ரஹிம் 5 ஓட்டத்துடனும், மொஹமட் மிதுன் 2 ஓட்டத்துடனும், மாமதுல்லா 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதற்கிடையே லிட்டன் தாஸ் 87 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச ஒருநாள் கிரக்கெட் அரங்கில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒருகட்டத்தில் பங்களாதேஷ் அணி 32.2 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து, 151 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து சவுமிய சர்க்கார் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை குவிக்க ஆரம்பித்தனர்.

எனினும் 40 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த லிட்டன் தாஸ் 117 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டங்கள், 12 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 121 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அணித் தலைவர் மோர்ட்டாஸாவும் 7 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார்.

அதன்பின் பங்களாதேஷ் அணி 44.1 ஓவரில் 200 ஓட்டங்களை தொட்டது. ஆடுகளத்தில் நஸ்முல் இஸ்லாம் ஒரு ஓட்டத்துடனும், சவுமிய சர்க்கார் 22 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வந்தனர். 

46,4 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 213 ஆக இருந்தபோது நஸ்முல் இஸ்லாம் 7 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க ரஹ்மான் ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாடிவர சவுமிய சர்க்கார் 33 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த ருபெல் ஹுசேனும் எதுவித ஓட்டமுமின்றி பும்ராவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டத்தை பெற்றக் கொண்டது. ஆகையால் இந்தியாவுக்கு வெற்றியிலக்காக 223 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், கேதர் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், சாஹல் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35