வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கிளாங்குளம் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளுடன் பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி வீட்டொன்றிலிருந்து 15 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமையால் வீட்டின் உரிமையாளர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை முன்வைத்தார்.

இதற்கிணங்க விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் உக்கிளாங்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 பவுண் தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.

மேலும் அவரை இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் குறித்த பெண்ணை நீதிவான் விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.