(எஸ்.ரவிசான்) 

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் கட்டாயமாக பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினையடுத்து பாண்உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை மாற்றம் தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின்தலைவர் என்.கே. ஜெயவர்தனவிடம் வினவிய போதே அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன,

கோதுமை மாவின் விலையினை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 ரூபாவிலிருந்து 20 ரூபாவரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ப்றீமா நிறுவனம்அறிவித்தது. 

இவ்வாறான நிலையில் இவ்அதிகரிப்பு காரணமாக பண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் ஒரு இறாத்தல் பாண்ஒன்றின் விலையினை 2.50 ரூபா தொடக்கம்5 ரூபாவரை அதிகரிக்க யோசனைகள் எமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியான விலை அதிகரிப்பினால் நாம் பெரிதளவு பாதிக்கப்படுகின்றோம்.தற்போது கோதுமை மாவின் விலை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது வேறு பொருட்களின் விலைகள் எவ்வாறு அதிகரிக்கும் என கூற முடியாதுள்ளது. இருந்த போதும் எமது பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை இரண்டும் மூன்று நாட்களில் விலை அதிகரிப்பினை நாம் கட்டாயம் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.