தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் வருகின்றன என தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாணசபை நல்லபடியாக செயற்பட்டு வருகிறது அதன் செயற்பாடு எதிர் காலத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். 

அடுத்த தேர்தல் வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வடமாகாணத்தின் ஆளுமையை கட்டியெழுப்பக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். 

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் வருகின்றன எனத் தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

கரவெட்டி ஸ்ரீநாரதா வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் அதன் அதிபர் ச.சுபேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;

நகரத்தை நோக்கி பாச்சல் கொடுக்கிற காலத்திலே கிராமப் புற பாடசாலைகள் முன்னேறுவது என்பது சற்று சிரமமான காரியம். 

பாடசாலைகளில் எதிர் வரும் காலங்களில் மாணவர்களின் தொகையை அதிகரிக்க வேண்டும். 

முன்பு ஒரு குடும்பத்தில் 8 , 10 பிள்ளைகள் இருப்பார்கள் ஆனால் இப்போது 2 பிள்ளைகளுடன் சிறிய, நல்ல குடும்பம் என இருக்கிறார்கள்.

பாடசாலைகளில் மாணவர்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாது போனால் பல பாடசாலைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதற்கான திட்டங்கள் செயற்பட வேண்டும். 

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் அதிகமாக வருகின்றன.

அதனாலே 13 ஆவது திருத்தச் சட்டத்தை விஷேடமாக வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டது.

வடமாகாணசபை இன்னும் 3 , 4 மாதங்களில் தேர்தலை நோக்கி பயணிக்கவுள்ளது.

அப்போது இங்குள்ள தமிழர்கள் உறுதியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நல்லமுறையில் இயக்கக் கூடிய, இயக்கிக் கொண்டிருக்கிற மாகாண சபையை இன்னும் மென்மேலும் வளர்ச்சிப் பாதையிலே செல்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

வடமாகாண கல்வி அமைச்சர் கே. சர்வேஸ்வரன் தனது காலத்தில் நல்ல முயற்சிகளை செய்துள்ளார்.

அவரின் பணி எதிர் காலத்திலும் தொடர வேண்டும் எனத்தெரிவித்தார்.