(எஸ்.ரவிசான்)

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அத்துடன் பிரதான நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதனால் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

நாடளாவிய ரீதியில் சில மாவட்டங்களில் வரட்சியான காலநிலையொன்று காணப்படுகின்றது. பிரதான நீர் தேக்கங்கள் மற்றும் நீர் மூலங்கள் வற்றிப் போயுள்ளமையினால் பொதுமக்கள் முடிந்தவரை குடி நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.