முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட தேவைக்காக சென்ற மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவுடனான இந்த விஜயத்தில் உறவினர்கள், கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளதாக அறியவருகின்றது.

சிங்கப்பூர் விஜயத்தை முடித்துகொண்டு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திருப்ப உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.